தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சத்யசாய்/மனஅமைதிக்கு எளிய வழி

மனஅமைதிக்கு எளிய வழி

மனஅமைதிக்கு எளிய வழி


ADDED : நவ 13, 2011 04:11 PM

Google News

ADDED : நவ 13, 2011 04:11 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* கடவுளிடம் 'மன அமைதியைக் கொடு', என்று வேண்டிக்கொண்டால் போதும். அதுவே சுகமானதும், நியாயமானதுமான பிரார்த்தனையாகும்.

* கடவுளின் அருளை உணர்ந்தவர்கள் அவர் இருப்பதை நம்புகிறார்கள், நேரில் பார்க்க வேண்டும் என்று கூறுவதில்லை. இந்த நம்பிக்கை வாழ்க்கைக்கு உறுதி தரும்.

* தூய்மையான பாத்திரம் போலத் துலக்கமாக இருக்கும் நல்ல உள்ளத்தில் இறைவனின் கருணையை ஏற்றுக் கொள்ளுங்கள். அது வாழ்வில் அளவிலாத நன்மைகளைத் தரும்.

* பகுத்தறிவுவாதிகள் எவ்வளவு தான் கற்றறிந்து வாதம் செய்தாலும், இறைவன் அருளை அடையும்போது தான் முழுமையான அமைதியைப் பெறுகின்றனர்.

* ஆசையின்றியும், பயன் கருதாமலும் செயல்களைச் செய்யுங்கள். அதன் பலனை இறைவனுக்கு அர்ப்பணித்து விடுங்கள். அமைதியான மனநிலையுடன் இருப்பீர்கள்.

- சாய்பாபா



Trending





      Dinamalar
      Follow us